பொது தகவல் அலுவலர், நகராட்சி அலுவலகம், விழுப்புரம் - 605 602,
தமிழ்நாடு தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005 பிரிவு 6 (1) - ன் கீழ் தகவல் கோரும் மனு :
“ஒப்புகை அட்டையுடன் கூடிய பதிவு அஞ்சல்”
(இம் மனுவில், மனு கட்டணம் ரூபாய் 10 /=க்கான நீதி மன்ற வில்லையினை ஒட்டியுள்ளேன்)
அனுப்புநர்: கடித எண் : 20211005(1)
ஆ.ரவிச்சந்திரன்,
மாவட்ட செய்தியாளர், உள்ளாட்சி முரசு நாளிதழ் ,
172. B, TNHB குடியிருப்பு, கீழ்ப்பெரும்பாக்கம்,
விழுப்புரம் - 605 602, Cell :9 3842 76190,
பெறுநர்:
பொது தகவல் அலுவலர்,
நகராட்சி அலுவலகம்,
விழுப்புரம் - 605 602,
விழுப்புரம் மாவட்டம்.
பொருள் : விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் வட்டம், விழுப்புரம் நகராட்சி
அலுவலகம் தொடர்பான தகவல் அளிக்க கோருதல் தொடர்பாக,
பார்வை : தமிழ்நாடு தகவல் ஆணையம் வழக்கு எண் 32576/ விசாரணை/F/2013,நாள்: 27-03-2014,
பொறுப்புடையீர் ! வணக்கம் !!
தகவல் 1 : விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் வட்டம், விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் தலைமை அலுவலர் முதல் கடைநிலை ஊழியர் வரை அனைத்து பணியாளர்களின் பெயர், ஒளிப்படம், (Passport Size Color Photo) அல்லது அடையாள அட்டை நகல், தந்தை / கணவர் பெயர், பதவி, பதவி நிலை, தற்போதுள்ள பதவியில் பணியேற்ற நாள், பணி நிலை (நிரந்தரம், தற்காலிகம், தினக்கூலி, ஒப்பந்தம்), பணிப்பிரிவு, பணிபுரியும் இடம் மற்றும் அலுவலக அஞ்சல் முகவரி, அதிகார எல்லை, கடமை மற்றும் பொறுப்புகள், அலுவலகப்பிரிவு தொலைப்பேசி எண், சாதரண அலைப்பேசி எண், Whatsapp எண், CUG எண், மின்னஞ்சல் முகவரி, இருப்பிட அஞ்சல் முகவரி, இணையத்தள முகவரி, ஒவ்வொருவரின் கடமை மற்றும் பொறுப்புகளின் விபரங்கள், அது தொடர்பான அரசாணை நகல், கடித நகல், சுற்றறிக்கை நகல், வழிகாட்டு நெறிமுறைகளின் நகல், நீதி மன்ற தீர்ப்பு நகல் (சான்றாவணங்களின் நகல்) ஆகியவற்றினை தகவலாக அளிக்கவும்,
மேற்கண்ட இனத்திற்குரிய சான்றொப்ப ஆவணத்திற்கு உரிய கட்டணத்தினை உரிய முறையில், வரையறுக்கப்பட்ட காலத்திற்குள் முறையாக தெரியப்படுத்தினால், அதன் படி செலுத்த தயாராக உள்ளேன்,
முன்னுரை :
தமிழ்நாடு தகவல் அறியும் உரிமைச்சட்டம் - 2005, மக்களுக்கான அதிகாரம், மக்களின் வலிமை மிக்க சட்ட ஆயுதம், மக்களுக்கு கிடைத்திட்ட இரண்டாவது சுதந்திரம் என்பதெல்லாம் பெயரளவில் உள்ளது,
இச்சட்டப்பிரிவு 4 - ன் படி தாங்களாக முன் வந்து, நிர்வாகத்தின் உண்மை மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில், எவரும், எளிதாக விழிப்புணர்வு பெறவும், முறையாக, மிகச்சரியாக பயன்படுத்தவும், முழுமையாக பயன் பெறவும்,
எந்த நிலையிலும், எந்த வகையிலும் ஏற்றத்தாழ்வின்றி தன்னிறைவு அடையவும், லஞ்சம் மற்றும் ஊழலற்ற நிர்வாகத்தினை செயல்படுத்திடவும், அனைத்து விபரங்களையும், அனைத்து வகையிலும் அச்சு, ஒலி மற்றும் ஒளி ஊடகங்களின் மூலம் காட்சிபடுத்திட / வெளியிட வேண்டும் என்ற விதியிருந்தும்,
இச்சட்டம் நடைமுறைக்கு வந்து 15 ஆண்டுகளாகியும், அதனை இன்றளவும் ஆட்சி மற்றும் அதிகார அமைப்புகள் பொருட்படுத்தாமல் இருப்பது வேதனைக்குரிய செயலாகும்,
தடை மற்றும் காலந்தாழ்த்தாமல் அளித்திட வேண்டிய விதிவிலக்கற்ற தகவலை அளிக்க மறுப்பது, குறிப்பிட்ட சில அரசு அலுவலர்களின் அதிகார வன்முறைக்கு சான்றாகும், மக்களாட்சி கொள்கைக்கு எதிரானதாகும், நேர்மிக்க அரசு அலுவலர்களுக்கு ஏற்படுத்தும் மானக்கேடாகும், லஞ்சம் மற்றும் ஊழலுக்கு வழி வகுப்பதாகும்,
முதல் மேல் முறையீட்டு அலுவலரை கலந்தாலோசிக்காமல் வேண்டுமென்றே தகவல் தர மறுத்திருப்பது பொது நல நீதியாளர்களை இழிவுபடுத்தும் செயலாகும்,
பொருத்தமற்ற காரணங்களை சுட்டிக்காட்டி, மனுதாரருக்கு நேரம், உழைப்பு மற்றும் நிதியிழப்பு மூலம் மன உளைச்சலை ஏற்படுத்தி, வேண்டுமென்றே, பொது நலத்தினை அழிக்கும் தீய நோக்கத்தோடு மேல் முறையீட்டிற்கு வழி வகுத்திருப்பது அதிகார ஆனவத்தின் உச்சமாகும்,
கடமை தவறும் அரசு அலுவலர்களை கடுமையாக தண்டிக்காமல் அவர்களின் பல்வேறு பின்னனிகளுக்கு பணிந்து, உள்நோக்கத்துாடு, கூட்டணி அமைத்து பாதுகாப்பதினால் ஏற்படும் தீங்காகும்,
இச்சட்டப்படி உள்ள அடிப்படை உரிமையை அடையவே பல வகையில் பல்வேறு இழப்புகளிடையே, இன்னல்களுடன் போராடி பெற வேண்டிய அவல நிலை தொடர்கிறது,
பொது தகவல் அலுவலரின் கவனத்திற்கான குறிப்புகள் :
மேற்கண்ட இனங்களில் எவையேனும் ஒரு சில இனங்கள் தங்களுடைய அரசு அலுவலகம் தொடர்பில்லாத போதும், அதனை தமிழ்நாடு தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005, பிரிவு 6(3) -ன் படி மாற்றி அனுப்பி அதன் விவரத்தை விண்ணப்பம் பெற்றுக்கொண்ட 5 நாட்களுக்குள் மனுதாரர் ஆகிய எனக்கு தெரியபடுத்தவும்,
தமிழ்நாடு தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005, பிரிவு 7(8)(3)-ன் படி முதல் மேல் முறையீட்டு அலுவலரின் அஞ்சல் முகவரியினை தரவும்,
தமிழ்நாடு தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005, பிரிவு 4(1)(b)(ix)-ன்படி தங்கள் அலுவலகம் சார்ந்தது என்பதை உறுதி செய்து கொள்ளவும்,
குறித்த காலத்தில், குறிப்பிட்ட தகவலை, முழுமையாக அளிக்காவிட்டாலும், தவறான, பொருத்தமற்ற, குறைகளுடன் தகவலை அளித்தாலும், தமிழ்நாடு தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005 பிரிவு 18 (1) -ன்படி கீழ் பொது தகவல் அலுவலராகிய தங்கள் மீது புகார் செய்ய உள்ளேன் என்பதையும்,
குறித்த காலத்தில் தகவல் அளிக்காவிட்டால் பொது தகவல் அலுவலராகிய தங்களிடம், தமிழ்நாடு தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005, பிரிவு 19(8) (b) -ன் படி இழப்பீடு தொகையும்,
தமிழ்நாடு தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005, பிரிவு 20 (1) -ன் படி அபராதம் விதிக்கவும் மற்றும் தமிழ்நாடு தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005, 20 (2) -ன் படி துறைவாரியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் , தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தில் முறையீடு செய்ய உள்ளேன் என்பதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்,
தாங்கள் தகவல்கள் மற்றும் ஆவணங்கள் அளித்த பிறகு அதன் உறுதித்தன்மையை மெய்பிக்கும் வகையில் தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005 பிரிவு 2(J) -ன் படி துணையாளர் ஒருவருடன் நேரடி ஆய்வு செய்யவும், ஒளிப்படம் மற்றும் காணொளி மூலம் பதிவு செய்து கொள்ளவும், தங்களது அலுவலக நாட்களில் அன்றாடப்பணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில், பத்து நாட்களுக்கு முன்னதாக தகுந்த நாள் மற்றும் நேரம் குறித்து ஆணை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்,
தமிழ்நாடு தகவல் ஆணையம் வழக்கு எண் 32576 / விசாரணை /F/2013,27-03-2014 நாளில் வழங்கப்பட்ட அறிவுறுத்தலை தங்களின் பார்வைக்கு கீழே கொண்டு வருகிறேன், மனுதாரருக்கு வழங்கப்படும் தகவல்களில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 -ன் வகை முறைகளின் கீழ் வழங்கப்பட்ட தகவல்கள் என்று குறிப்பிட்டு, பொதுத்தகவல் அலுவலரின் கையொப்பம், ஆதார் எண், நாள், பதவி மற்றும் அலுவலக முத்திரையுடன் தமிழ்நாட்டின் ஆட்சி மொழி மற்றும் என் தாய் மொழி தமிழில் வழங்குமாறு கேட்டு கொள்கிறேன்,
பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த ஆணையர் திருமதி Dr. S.SWARANA I.A.S அவர்களின் கடித எண் : 3038/AR.III/2020-1 நாள் : 06-03-2020 கடித ஆணையினை பின்பற்றவும்,
நன்றி ! வணக்கம் !!
நாள் : 05-10-2021, இப்படிக்கு,
இடம் : விழுப்புரம், ( ஆ.ரவிச்சந்திரன் ),
கருத்துகள்
கருத்துரையிடுக