அனுப்புநர்: கடித எண் : 20211005(2)
மாவட்ட செய்தியாளர்,
உள்ளாட்சி முரசு நாளிதழ் ,
172. B, TNHB குடியிருப்பு,
கீழ்ப்பெரும்பாக்கம்,
விழுப்புரம் - 605 602, Cell :9 3842 76190,
பெறுதல்
மாவட்டகல்விஅலுவலகம்,
மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம்,
விழுப்புரம் - 605 602,
விழுப்புரம் மாவட்டம்
பொறுப்புடையீர் வணக்கம் !
பொருள்: தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005. தமிழ்நாடு குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்விஉரிமைச் சட்டம் 2009, விழுப்புரம் மாவட்ட எல்லைக்குள் இயங்கும் தனியார் ஆங்கிலவழிக் கல்விப்பள்ளிகள் தொடர்பாக சில தகவல்கள் கோருதல்,
கீழ் கண்ட விபரங்களை தகவல் பெறும் உரிமைச்சட்டம் - 2005 பிரிவு 6 (1)-ன் கீழ் தகவல் அளிக்க வேண்டுகிறேன்
1. குழந்தைகளுக்கான இலவசமற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன்படி, விழுப்புரம் மாவட்ட எல்லைக்குள் இயங்கும் ஆங்கிலவழிக் கல்வி கற்பிக்கும் தனியார் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல் நிலை(CBSC, MATRICULATION...போன்ற) பள்ளிகளின் விபரங்களை இருப்பிட, மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண் விபரங்களுடன் தகவலாக அளிக்கவும்,
2. மேற்படி பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்புகளில் நலிவடைந்த வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினருக்கு, வகுப்பின் மொத்தசேர்க்கையில் 25 விழுக்காடுக்கு குறையாமல் 2020-21 மற்றும் 2021-ம் கல்வி ஆண்டில் சேர்க்கை செய்யப்பட்டு 8-ம் வகுப்பு முடிக்கும் வரை, அவர்களுக்கு இலவச கட்டாயக்கல்வி அளிக்க வகை செய்ய, சேர்க்கப்பட்ட இரு பால் குழந்தைகளின் விபரங்களை பள்ளிவாரியாக தகவலாக அளிக்கவும்,
3. அவ்வாறாண இருபால் குழந்தைகளுக்கு கட்டாயக் கல்வி திட்டத்தின் கீழ் இலவசமாக அளிக்க வேண்டிய சலுகைகள் ( பாடப் புத்தகம், பாடப் புத்தகப்பை, காலணி, சீருடை கல்விக்கட்டணம் மற்றும் இதரக் கட்டணங்கள் போன்றவை) பற்றியவிபரங்களைபள்ளி மற்றும் வகுப்பு வாரியான தகவல்களை அளிக்கவும்,
4. மேற்படி சலுகைகளுக்காக கடந்த 5 ஆண்டுகளில் அரசிடமிருந்து இனவாரியாக பாடப் புத்தகம், புத்தகப் பை, காலணி, சீருடை, பள்ளிக்கட்டணம், போன்றவற்றிற்காக பெறப்பட்ட தொகை விபரங்களை பள்ளிவாரியாக தகவலாக அளிக்கவும்,
5. இவ்வாறான நேர்வில் 5-ம் வகுப்பு வரைஉள்ள பள்ளிகளில் இலவசக் கல்வி சலுகையைப் பெற்று 6-ம் வகுப்புக்குச் செல்லும் சந்தர்ப்பங்களில் தொடர்ந்து 8-ம் வகுப்புவரை இலவசக் கல்வி பெற, அந்த குழந்தைகள் பின்பற்ற வேண்டிய முன்னுரிமை அடிப்படையிலான அரசின் வழிகாட்டு விபரங்களை தகவலாக அளிக்கவும்,
6. மேற்படி பள்ளிகளை கடந்த 2020-21 மற்றும் 2021-22 கல்வி ஆண்டில் கடைசியாக ஆய்வு செய்த கல்வித்துறைஅலுவலர்களின் ஆய்வறிக்கையின் நகலை சான்றொப்பமிட்டுஅளிக்கவும்,
7. கோரப்பட்ட தகவல்கள் தொடர்பாக நான் கட்டணம் ஏதும் செலுத்த வேண்டி இருந்தால் பிரிவு 7(3)(அ) படி, அத்தொகை தீர்மானித்ததற்கான கணக்கு விபரங்களுடன் தகவல் அளித்தால், அதனைசெலுத்தவும் தயாராக இருக்கிறேன்,
பொது தகவல் அலுவலரின் கவனத்திற்கான குறிப்புகள் :
மேற்கண்ட இனங்களில் எவையேனும் ஒரு சில இனங்கள் தங்களுடைய அரசு அலுவலகம் தொடர்பில்லாத போதும், அதனை தமிழ்நாடு தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005, பிரிவு 6(3) -ன் படி மாற்றி அனுப்பி அதன் விவரத்தை விண்ணப்பம் பெற்றுக்கொண்ட 5 நாட்களுக்குள் மனுதாரர் ஆகிய எனக்கு தெரியபடுத்தவும்,
தமிழ்நாடு தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005, பிரிவு 7(8)(3)-ன் படி முதல் மேல் முறையீட்டு அலுவலரின் அஞ்சல் முகவரியினை தரவும்,
தமிழ்நாடு தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005, பிரிவு 4(1)(b)(ix)-ன்படி தங்கள் அலுவலகம் சார்ந்தது என்பதை உறுதி செய்து கொள்ளவும்,
குறித்த காலத்தில், குறிப்பிட்ட தகவலை, முழுமையாக அளிக்காவிட்டாலும், தவறான, பொருத்தமற்ற, குறைகளுடன் தகவலை அளித்தாலும், தமிழ்நாடு தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005 பிரிவு 18 (1) -ன்படி கீழ் பொது தகவல் அலுவலராகிய தங்கள் மீது புகார் செய்ய உள்ளேன் என்பதையும்,
குறித்த காலத்தில் தகவல் அளிக்காவிட்டால் பொது தகவல் அலுவலராகிய தங்களிடம், தமிழ்நாடு தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005, பிரிவு 19(8) (b) -ன் படி இழப்பீடு தொகையும்,
தமிழ்நாடு தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005, பிரிவு 20 (1) -ன் படி அபராதம் விதிக்கவும் மற்றும் தமிழ்நாடு தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005, 20 (2) -ன் படி துறைவாரியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் , தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தில் முறையீடு செய்ய உள்ளேன் என்பதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்,
தாங்கள் தகவல்கள் மற்றும் ஆவணங்கள் அளித்த பிறகு அதன் உறுதித்தன்மையை மெய்பிக்கும் வகையில் தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005 பிரிவு 2(J) -ன் படி துணையாளர் ஒருவருடன் நேரடி ஆய்வு செய்யவும், ஒளிப்படம் மற்றும் காணொளி மூலம் பதிவு செய்து கொள்ளவும், தங்களது அலுவலக நாட்களில் அன்றாடப்பணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில், பத்து நாட்களுக்கு முன்னதாக தகுந்த நாள் மற்றும் நேரம் குறித்து ஆணை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்,
தமிழ்நாடு தகவல் ஆணையம் வழக்கு எண் 32576 / விசாரணை /F/2013,27-03-2014 நாளில் வழங்கப்பட்ட அறிவுறுத்தலை தங்களின் பார்வைக்கு கீழே கொண்டு வருகிறேன், மனுதாரருக்கு வழங்கப்படும் தகவல்களில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 -ன் வகை முறைகளின் கீழ் வழங்கப்பட்ட தகவல்கள் என்று குறிப்பிட்டு, பொதுத்தகவல் அலுவலரின் கையொப்பம், ஆதார் எண், நாள், பதவி மற்றும் அலுவலக முத்திரையுடன் தமிழ்நாட்டின் ஆட்சி மொழி மற்றும் என் தாய் மொழி தமிழில் வழங்குமாறு கேட்டு கொள்கிறேன்,
பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த ஆணையர் திருமதி Dr. S.SWARANA I.A.S அவர்களின் கடித எண் : 3038/AR.III/2020-1 நாள் : 06-03-2020 கடித ஆணையினை பின்பற்றவும்,
நன்றி ! வணக்கம் !!
நாள் : 05-10-2021, இப்படிக்கு,
இடம் : விழுப்புரம், ( ஆ.ரவிச்சந்திரன் ),
கருத்துகள்
கருத்துரையிடுக